Wednesday, October 12, 2016

ஏழாவது சொர்க்கம் - 5

பத்துமாதமாக நிலைத்திருந்த பேக்கரி வேலையை துரதிருஷ்ட்டவசமாக ஏற்பட்ட ஒரு சிறுசண்டையில் இழந்துபோனான். தனது பொஸிசனைக் கைப்பற்றும் நோக்கம் ரஞ்சனுக்கு இருப்பதை அறிந்து முதலில் அவனுடன் சிறுசிறு உரசல்கள் வந்தன. பத்திரோனின் அடிப்பாதம் தாங்கி ரஞ்சன் நடக்க வெளிக்கிட்டபோது அவனை நோக்கி அடிக்கடி நக்கலை எறியத் தொடங்கினான் ராஐ¡. அவனது நக்கல்கள் நகையாடல்களையெல்லாம் பொருட்படுத்தாது ஒவ்வொரு படியாக ரஞ்சன் முன்னேறத் தொடங்கிய பிறகுதான் வேலை இழந்து போவதற்கான அபாயம் தன் காலைக் கடிப்பதை உணர்ந்தான்.

இவனைவிட இளமையும் துடிப்பும் நேரே விவசாயம் செய்து கொண்டிருந்த வயலிலிருந்து சேற்றுக்காலுடன் கனடா வந்திறங்கியது போல இருந்த ரஞ்சனின் கிராமப்புறத் தோற்றமும் பத்திரோனின் கவனிப்பில் நம்பிக்கையாக விழத் தொடங்கியது. விசயம் தெரிந்த வேலைகாரன் ஒரு எசமானனுக்கு எப்போதுமே வில்லங்கங்களைக் கொண்டு வரக்கூடியவன். ரஞ்சனைப்போன்ற வெகுளியும் மாடுமாதிரி வேலை செய்பவனும் பத்திரோனின் பணப்பெட்டியை நிறைப்பதற்கு உபயோகமானவர்கள். பத்திரோன் ரஞ்சனில் நம்பிக்கையும் அக்கறையும் வைப்பதன் அறிகுறிகள் தோற்றம் காட்டத் தொடங்கிய இரண்டு மாதங்களின் பின்னர்தான் அந்த விபத்து நடந்தது.

வாரத்திற்குத் தேவையான மா சீனி மோல்ட் போன்ற பொருட்களுக்கு ஓடர் கொடுப்பதற்கு அவனிடமே எவ்வளவு கொள்வனவு செய்ய வேண்டுமென்று கேட்பான் பத்திரோன். இவன் கைவசமுள்ள இருப்பைக் கணக்கெடுத்து மறுவாரத்திற்குத் தேவையான மாமூட்டைகள் மற்றும் இதர பொருட்களின் அளவு குறித்துக் கொடுப்பான். இது ஒன்றுதான் மாக்குழைக்கும் பகுதிக்கு அப்போது யார் தலைமை என்று காட்டும் குறிப்பு. மற்றும்படி எல்லோருமே உழவுமாடு மாதிரி வேலை செய்யவேண்டியதில் எந்த மாற்றமும் இருக்காது. அத்துடன் தலைவனுக்கும்இ கையாளுக்கும் ஒரே சம்பளம்தான் கொடுக்கப்படும்.

அரசாங்கவிடுமுறை நாட்களில் நு¡ற்றுஇருபத்தேழு மூட்டையிலிருந்து பத்திருபது மூட்டைகள் குறைத்துக் குழைக்கவேண்டியதிருக்கும். அப்படியான நாட்களில் ஒருசில மணித்தியாலங்கள் முன்னர் வேலை முடிந்தால் பேக்கரி முழுவதும் கூட்டிக் கழுவப் பணிப்பான் பத்திரோன். ஆனால் மாக்குழைக்கும் தலைமைப்பிரகிருதி மட்டும் விரும்பினால் வீட்டுக்கு செல்லலாம். இந்த ஒரேயொரு சலுகையை ராஐ¡ எடுத்துக் கொள்வதில்லை. வீடு என்பது உடல் உள ஆறுதலுக்காக ஒதுங்கிக்கொள்ளும் மகத்தான தரிப்பு. அவனுக்கு இதற்கு நேர்மாறாக சிங்கத்தின் குகை மாதிரி அமைதிகாட்டி பத்தைச் சொரியும் பிரதேசம் அது. பெரியமாமா பெரியமாமி என்ற கண்ணிவெடிப் பிரதேசங்களைக் கடந்துபோய் ஆறுதல்ப் படமுடியுமா? ஆகவே அவனும் சகவேலைகாரர்களுடன் சேர்ந்து கூட்டிக் கழுவி

வழமையான நேரத்திற்கு வேலையை முடிப்பான்.

அன்று பேக்கரியில் மிகவும் கலகலப்பாக இருந்தது. பத்திரோன் தானே வீட்டில் வடிக்கும் புதிய வைன் கொண்டு வந்திருந்தான். பெரியசாடியில் கொண்டுவந்திருந்த வை¨ன் பாண் பணுஸ் உருட்டும் பாரிய மேசையில் வைத்து அதற்கருகே பிளாஸ்ரிக் கப்புகளும் வைத்து எல்லோரையும் எடுத்துக் குடிக்கச் சொல்லி தானும் நிறைவெறியில் நின்றான். அடுத்தநாள் கிறிஸ்தவர்களின் அதுவும்இ இத்தாலிக் கத்தோலிக்கர்கள் சிறப்பாகக் கொண்டாடும் பாஸ்காப் பண்டிகை நாள். இந்தப் பேக்கரியில் பாண் பணுஸ் அயிட்டங்கள் கொள்வனவு செய்யும் கணிசமான சுப்பர்மார்க்கெட்டுகள் பாஸ்காவுக்கு மூடப்பட்டிருக்கும் ஆதலால் எல்லோருக்குமே வேலை குறைந்திருந்து வைனைக் குடித்து கலகலப்பாக இருந்தார்கள்.

மெ'¢ன் மூலம் மாக்குழைக்கும் இவனது பகுதிக்குஇ மத்தியானம் இரண்டுமணிக்கே வேலை முடிந்துவிட்டது. ஒருகப் வைன் ஊத்திக்கொண்டு வந்து குடித்துக் குடித்து மாக்குழைக்கும் மெ'¢னை துப்பரவு செய்து கொண்டிருந்தான். வாரத்தில் ஒருதடவை மெ'¢னை மிகவும் வடிவாகத் துப்பரவு செய்து அதன் உட்பகுதிக்கு எண்ணெய் பூசி ¦ஐ¡லிக்கவிடுவது வழமை. அன்று வாரக்கடைசி இல்லாவிட்டாலும் நாளை விடுமுறை ஆதலால் எண்ணெய் பூசிவிடும் எண்ணத்துடன் மெ'¢னைத் துப்பரவாக்கிக் கொண்டிருந்தான். பத்திரோன் வடித்தது நல்ல காரம் கூடிய வைன்இ இரண்டாவது கப் குடித்தபிறகு அது தன் வேலையைத் தொடங்கிவிட்டது. கடந்த காலங்களை போதையில் இருக்கும்போது மீட்டிப் பார்ப்பதில் உள்ள சுகமே தனி. எவ்வளவுதான் அந்தக் காலங்களில் துன்பச்சுமை தாளாது தவண்டு திரிந்து பரதேசியாய் அலைந்து கடின வாழ்க்கையைக் கழித்திருந்தாலும் இப்போது சிவனின் கழுத்தைச் சுத்திக்கொண்டு பாதுகாப்பான இடத்திலிருந்து திரும்பிப் பார்க்கும் போது புகார்படர்ந்த அந்த வாழ்வு நிறைய சேதிகள் சொன்னது. சந்தோசம் தந்தது.

இந்தியாவில் இயக்கத்தில் இருந்தபோது குடிபழகிய அந்த வெள்ளோட்டநாள் ஒரு துணிகரம் செய்ததுபோல மனதில் ஊறிப்போய்க் கிடந்தது. நானு¡றுபேர்களுக்கு சமையல் செய்யும் பெரிய சமையல்க் கொட்டகைக்குள் ரொட்டிக்கு மாக்குழைத்துக் கொண்டிருந்தபோது தினேஸ் சொன்னான் தனக்குப் பாண் போடத்தெரியும் என்று. அன்றிலிருந்து வாரத்திற்கு ஒருமுறை தினேசின் தலைமையில் முகாமிலுள்ள போராளிகள் எல்லோரினதும் காலைச் சாப்பாட்டிற்கு பாண் போடத் தொடங்கினார்கள். மாக்குழைத்து போறணையில் சுட்டு பாணாகி வெந்துவர விடிகாலை நாலுமணியாகி விடும். வேர்க்க விறுவிறுக்க பாண் பேக்பண்ணி எடுத்து அடுக்கிக் கொண்டிருக்கும்போதுதான் ஒருநாள் கிராமத்துக் கசிப்பு வேண்டிவந்து இரகசியமாகக் குடித்தார்கள். அதுவும் நீண்டநேரம் போதை நிலைக்கவேண்டும் என்பதற்காக சுடச்சுட பாணும் தின்று கசிப்பும் குடித்த நாளன்று பயிற்சியை கனவில் செய்ததுபோல செய்தான். பாணில் ஊறிப்போய் வெகுநேரமாக நிலைத்திருந்த வெறியில் ஓடுவதும் சாடுவதும்இ நிலத்தில் ஊர்ந்து தப்பிப் போவதற்கான பயிற்சி செய்த போதும் உடல்நோவோ சிரமமோ தெரியவில்லை. அடுத்தநாள் எழும்பி நடக்கக்கூட முடியாதவாறு உடம்பு வேதனை கண்டது.

பழைய நினைவின் போதையுடன் மெ'¢னைத் துப்பரவாக்கிவிட்டு அளவுமக்கில் எண்ணெய் எடுத்துவந்து மெ'¢னுக்குப் பூசிக் கொண்டிருந்தபோது பத்திரோன் "ரஞ்சா..! ரஞ்சா..!!" எனக் கூப்பிட்டுக் கொண்டுவரும் சத்தம் கேட்டது.

ராஐ¡ வேலை செய்துகொண்டே திரும்பிப் பார்த்தான். பாண் அடுக்கும் தள்ளு வண்டிலை மல்லாக்காகப் புரட்டி தண்ணி அடித்துக் கழுவிக் கொண்டிருந்த ரஞ்சன் பத்திரோன் கூப்பிடும் சத்தத்தைக் கேட்டதும் செய்த வேலையை விட்டுவிட்டு நாய்க்குட்டி போல ஓடிவந்தான்.

"ரஞ்சா உனக்கு என்ன வேண்டும்.. எத்தனை மூடைமா? எத்தனை மூடைசீனி வேண்டும் சொல்" என்று பத்திரோன் ரஞ்சனிடம் மிகப்பலமாக அதுவும் ராஐ¡வுக்கு கேட்கவேண்டும் என்ற குறிப்புடன் கேட்டான்.

மா 140பாக்இ சீனி 8பாக்இ மோல்ட் 3பாக் என்று ஒருவித பெருமிதத் தோரணையுடன் கூறிக்கொண்டிருந்தான் ரஞ்சன். இவனுக்கு ரஞ்சன் சொல்லிக் கொணடிருக்கும் சாமான்களின் அளவுதொகை ஏற்கனவே மாமூலான நாட்களில் தான் குறிப்பிடும் தொகைதான் என விளங்கியது. நாளைக்கு விடுமுறை என்பதும் இன்று இருபத்தேழு மூட்டை குறைத்துக் குழைத்ததும் ஞாபகத்திற்கு வந்தது. அதைவிட குடித்த வைன் வயிற்றிற்குள் போய் மூளைக்கு ஏறி சில வில்லங்கங்களைத் தோற்றுவித்திருந்தது.

"டேய்..! ....... நாளைக்கு லீவெல்லே.. என்ன மயிருக்கு இவ்வளவு கூடச் சொல்லுறாய்". என்றான் ராஐ¡.

ராஐ¡ தன்னைத் து¡சணத்தால் பேசியதும் ரஞ்சனும் வைன் குடித்து ஏற்கனவே உருவேறி இருந்ததும் அவனுக்கு சுள்ளென்று ஏறியது. ராஐ¡ அப்படிக் கூப்பிட்டது இவனது மர்மஸ்தானத்தில் படீரென்று குத்துவிட்டது போல வலித்தது. ஏற்கனவே ரஞ்சன் எதிர்பார்த்திருந்ததும் இப்போது பத்திரோனே ஏற்படுத்தித் தந்த அருமையான சூழ்நிலையை அவன் கோட்டைவிடத் தயாராக இருக்கவில்லை. அவனும் சூடாகப் பதில் கொடுத்தான்.

"பத்திரோன் என்னட்டைக் கேக்கிறான் நான் பதில் சொல்லுறன். இடையில உமக்கென்ன விசர்ப்.....ஞாயம். வாயப் பொத்திக்கொண்டு நீர் உம்மட வேலையைப் பாரும்." என்றான் ராஐ¡வை நோக்கி.

தான் வேலை பழக்கின சின்னப் பெடியன் அதுவும் நேற்று முளைத்த பயல் தன்னை மிஞ்சிவிட்டதைக் கண்ட மனிசப் பழிவாங்கும் குணம் ரஞ்சனது பதிலால் சூடேறஇ கையிலிருந்த எண்ணெய் மக்குடன் ஓடிப்போய் ரஞ்சனின் தலையில் முளுக வார்த்துவிட்டு அவனைப் பிடித்து குபோசாகத் தள்ளிவிட்டான் ராஐ¡.

பிடரி அடிபட விழுந்த ரஞ்சன் சுதாகரித்துக் கொண்டு எழும்பி மேசையில் இருந்த கத்தியைத் து¡க்கினான். நடுவிலே நின்ற பத்திரோனுக்கு முதலில் என்ன நடக்கிறதென்று விளங்காமலேயே பயத்தில் வெறி முறிந்துவிட்டது. பைத்தியக்காரனைப் போல "பாலா.. பாலா.. காந்தன் காந்தன்" என்று கூவியபடி §ஐசுநாதர் மாதிரி கையை விரித்து நின்று இருவருக்குமிடையில் சதிராடிக் கொண்டிருந்தான். போறணையில் நின்று மும்முரமாக பேக் செய்துகொண்டிருந்த பாலனும் காந்தனும் தடியைத் து¡க்கி வீசியெறிந்துவிட்டு இவர்களை நோக்கி ஓடிவந்து இரண்டு பேரையும் பிடித்துக் கொண்டார்கள்.

ராஐ¡வை கட்டிப்பிடித்து இழுத்துக் கொண்டு பேக்கரிக்கு வெளியே கொண்டு வந்தான் பாலன். பாலனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது ராஐ¡வுக்கும் ரஞ்சனுக்குமிடையே தலைமைப் போட்டி உருவாகியிருக்கிறதும்இ பத்திரோன் ரஞ்சன் பக்கம் சாய்ந்திருப்பதும். இப்படியான போட்டிகள் கடைசியில் யாராவது ஒருவருடைய வேலை இழப்புடன் முடிவு பெறும். "தன் பின்னர் பேக்கரி ஒருவரையும் ஞாபகம் வைத்திருக்காது மாமூலான வேலையில் மூழ்கிவிடும்.

"ஏன் ராசா பைத்தியக்கார வேலை செய்தனீர் அவன்தான் முட்டாளெண்டா உமக்கும் என்ன புத்தி மாறிப்போச்சே"

"கொஞ்சநாளாப் பாத்துக்கொண்டு வாறனண்ணை அவன்ரை செருக்கு ஏறிப்போச்சு"

"உங்களுக்கை அடிச்சுக்குத்தினா பத்திரோன் எல்லாத் தமிழாக்களையும் கழுத்தைப்பிடிச்சு வெளியால விட்டிடுவான். உங்களுக்கென்னஇ நீங்கள் ரண்டுபெரும் வெறுங்குண்டி. நாங்கள்தான் குடும்பங்குட்டி எண்டு வேலையில்லாமல் கஸ்ரப்படோணும்."

"இல்லையண்ணை.. இவன்ரை பல்லைத் தட்டிக் கையில குடுத்தாத்தான் என்ரை கோவம் ஆறும்."

"கேசும் முடியேல்லை ஒரு மயிரும் முடியேல்லை பல்லைத் தட்டப் போறாராம்."

என்று புறுபுறுத்தபடி பாலன் இழுத்துக்கொண்டு வீதிக்கு வந்து ராஐ¡வுக்கு நிறையப் புத்திமதிகள் சொன்னார். அவன் கோபத்திலும் வெறியிலும் பாலனை திரும்ப இழுத்துக் கொண்டு பேக்கரிக்குள் பாய முயல சீனியர் காந்தன் ராஐ¡வின் 'சோல்டர்பாக்'கைத் து¡க்கிக்கொண்டு இவர்களை நோக்கி வந்தார்.

"பாலா போறணையில பாண் கருகப்போகுது போய்ப் பாருங்கோ நான் இப்ப வாறன்" என்று சொல்லி பாலனை பேக்கரிக்குள் அனுப்பிவிட்டு இவனிடம் பாக்கைக் கொடுத்தார்.

"ராசா நேர வீட்டுக்கு உடன போம். உம்மட அவசரப் புத்தியால அருமந்த வேலைக்கு உலை வைச்சுப் போட்டீர். நான் மெல்லப் பத்திரோனிட்டக் கதைச்சுப் பாத்திட்டுப் பிறகு உமக்கு ரெலிபோன் எடுக்கிறன்."

சீனியர் காந்தனில் எப்போதுமே இவனுக்கு மரியாதை இருந்து வந்திருக்கிறது. லீவுநாட்களில் சிலபோழுதுகளில் ரெலிபோன் பண்ணி ராஐ¡வை தன் வீட்டுக்குக் கூப்பிட்டு பியர் குடித்து நல்ல சாப்பாடும் போட்டு உபசரித்திருக்கிறார். இவனும் சீனியர் காந்தனின் குட்டிமகளுக்கு அவ்வப்போது விளையாட்டுச் சாமான்கள் வேண்டிக்கொடுத்து அது "மாமா..! மாமா..!!" என்று மழலையில் கூப்பிடும்போது சொந்தக் குடும்பத்தின் நெருக்கத்தை உணருவான். இருவரும் பரஸ்பரம் அண்ணன் தம்பிமாதிரி பழகிக் கொண்டார்கள். அவர் போகச் சொன்னதுமே இவன் செம்மறியாடு தலையைக் குத்திக்கொண்டு நடப்பது போல விறுவிறுவென்று மெட்ரோவை நோக்கி நடந்து சென்றான்.

தனிமையில் யோசிக்கும் போதுதான் அவனுக்கு வேலைபற்றிய பயம் வந்தது. இப்படி நாள்முழுதும் கஸ்ரப்பட்டு வேலைசெய்தும் எடுக்கும் சம்பளம் சீட்டுக்கட்டி பெரியமாமனுக்கு மாதாமாதம் நானு¡று டொலர்ஸ் கொடுத்துஇ மேலதிகமாக சாப்பாட்டுக்காசு கொடுத்துஇ மெட்ரோப்பாஸ் வேண்டி அவ்வப்போது பெரியமாமன் திருப்பித்தருகிறேன் என்று ஏமாற்றிவேண்டும் தொகைகள் என்று கையும் கணக்கும் சரியாக இருக்கிறது. இதில் சீட்டு முடிய இன்னமும் றுமாதங்கள் இருக்கிறது. சீட்டைப் பெரியமாமன் முழுவதும் எடுத்துவிட்டான் என்ற றுதல் இருந்தும் கட்டிமுடிக்க காசு வேண்டுமே. சிவராசா வேறு இவனது நண்பராகிவிட்டார். அவருடன் வேலை செய்யும் ஒருநாள் சம்பளக்காசுதான் சிகரெட்டுக்கும் பியருக்கும் அவ்வப்போது நண்பர்களுடன் சென்று பார்க்கும் படத்திற்கும் உபயோகமாகிறது. அதுவும் இவனது இரண்டே இரண்டு நண்பர்களும் தொழுநோய் வந்து விரல் அழுகிப்போனவர்கள். படத்திற்கு ரிக்கெற் எடுக்கும்போது பியர் வேண்டிவிட்டு காசு கொடுக்க வரிசையில் நிற்கும்போது நண்பர்கள் இருவரது கைகளும் அவர்களது ஐ£ன்ஸ்பொக்கட்டுக்குள் மறைந்துவிடும் எவ்வளவுதான் பகீரதப்பிரயத்தனம் செய்தாலும் காஸ்கவுண்டரைக் கடக்கும்வரை அவர்களது கைகளை வெளியில் இழுத்துவிடமுடியாது. கடையைவிட்டு வெளியே வந்ததும் பியர்க்கேசைத் து¡க்குவதற்கு மட்டும் ஆளாளுக்கு உதவிக்கு வருவார்கள். என்ன செய்வது இந்த இயந்திரவாழ்க்கையை இனிமையானதாக்க வரும் ஒரு சின்னப்பொழுதை அவர்களுடன்தான் கழிக்க வேண்டியிருக்கிறது.

மெட்ரோ ஸ்ரேசனுக்குக் கிட்ட வரத்தான் அவனுக்கு இப்போது எங்கே போவதென்ற சிக்கல் வந்தது. இவ்வளவு வெள்ளெண வீட்டுக்குப் போய் என்ன செய்வது..? பெரியமாமன் வீட்டில் இருந்தால் நாய்போல மோப்பம் பிடித்துக் குடித்ததை அறிந்துவிடுவான். குடிப்பதைப் பற்றி பெரியமாமனுக்கு பெரிதாக ஏதும் வருத்தம் இருக்கா என்றாலும் வேலைக்குப் போகாமல் குடித்துவிட்டு வருகிறான் என்ற தப்பெண்ணத்தில்இ கேள்விக்குமேல் கேள்வி கேட்பான்.

பெரியமாமி வேறு கர்ப்பமாக இருக்கிறாள். பெரியமாமி சத்தி எடுக்கத் தொடங்கியதிலிருந்து வேலையால் வந்தபிறகு இரவுச்சமையல் இவன்தான் செய்கிறான். இவனது சமையலிலுள்ள து¡க்கலான உறைப்பும் ருசியும் பெரியமாமனுக்குப் பிடித்துவிட்டது. பெரும்பாலும் இப்போது இரவுச்சாப்பாட்டிற்கு முன்னர் இரண்டுகிளாஸ் விஸ்கி குடித்தபிறகுதான் பெரியமாமன் சாப்பிடவே உட்காருகிறான்.

ராஐ¡ இப்போது வீட்டிற்கு போகும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு மெட்ரோ எடுத்து ¦ஐறிபார்க்குக்கு வந்தான். வரும்வழியில் ஒரு கடையில் 350"ட பியர்ரின் வேண்டி கடதாசி பாக்கிற்குள் போட்டு. தன் சோல்டர் பாக்குக்குள் வைத்துக் கொண்டான்.

பார்க்கில் இன்னமும் ஆட்கள் நிறையவில்லை. உதிரியாக ஓரிருவர் மரநிழலில் இருந்தார்கள். அடர்த்தியான பற்றைக்குள் ஒன்றிரண்டு காதலர்களின் அசைவுகளும் தெரிந்தன. அவன் ஓரிடத்தில் ஒதுக்கமாக இருந்த கதிரையில் இருந்துஇ சோல்டர் பாக்கை திறந்து மடியில் வைத்துக்கொண்டு பியரை உடைத்து குடிக்கத் தொடங்கினான்.

பியர் உள்ளே இறங்க இறங்க ரஞ்சனின் மூக்கை உடைத்து ரத்தம் பார்க்க வேண்டுமென்ற வெறி பிறந்தது.


பேக்கரி வேலையை இழந்து ஆறுமாங்களாகி விட்டது. அவ்வப்போது கிடைக்கும் முகவரிகளைப் பொறுக்கிக் கொண்டு வேலை தேடி அலைந்ததுதான் மிச்சம். ஞாயிறுவேலை தொடர்ந்தபோதும்இ வெல்·பெயரும் ஞாயிறு வேலைக்காசுமாகச் சேர்த்துத்தான் சிவராசாவிற்கு சீட்டுக்காசு கட்டிவந்தான். இந்த ஆறுமாதங்களும் வாடகையும் சாப்பாட்டுக்காசும் கொடுக்காமல் பெரியமாமனுடன் இருப்பதில் உள்ள இடர்கள் மெல்ல மெல்ல அவனைத் தாக்கத் தொடங்கின.

பெரியமாமிக்கு சத்தி நின்று மாதங்கள் கடந்து இதோ பேறுகாலமும் வரப்போகிறது. நாள் நெருங்கநெருங்க பெரியமாமனின் முகம் சந்தோசத்தை வெளிவிடுவதற்கு பதில் ராஐ¡ மீது உ-ணத்தை வாரித் தெளிக்கத் தொடங்கியது. எதெற்கெடுத்தாலும் மாமன் சீறிவிழத் தொடங்கினான். ராஐ¡ உடைப்பதெல்லாம் பொன்குடமாக பெரியமாமனுக்கும் பெரியமாமிக்கும் தெரிந்தது.

"டேய்..! வேலை வெட்டியில்லை... வீட்டுவேலைகூட செய்யாம எங்க சுத்தித்திரியிறாய்..?"

"மாமிக்கு கொஞ்சம் பால் காய்ச்சிக்குடு..!"

"·ப்ரிட்ஐ¥க்கை எல்லாத்தையும் வழிச்சுத் துடைச்சுப் போட்டாய். மார்க்கெட்டுக்குப் போய் மரக்கறி வேண்டிவா..!"

பெரியமாமன் ஏவும் எல்லா வேலைகளையும் மூச்சுக்காட்டாமல் செய்தான் ராஐ¡. இரண்டுவேளைச் சமையலையும் அவனே செய்துமுடித்தான். எல்லா சிரமங்களையும் அவனது தோளில் ஏற்றிவிட்டு ஆனந்தனுக்கு மட்டும் மாமா ராசமரியாதை செய்தார். அவன்தானே சுளையாக வாடகை கொடுப்பவன்.

சீட்டின் கடைசி மாதக்காசு கட்டிமுடித்தபோதுஇ சற்று நிம்மதியாக இருந்தது. னாலும் அடுத்த மாசம் முதலாம்திகதி வெல்·பெயர் செக் வந்தபோது பழக்கதோசத்தால் பெரியமாமனது கை நீண்டது. அந்தமாதம் மாமிக்கு பிரசவநேரம் தலால் வெல்·பெயரை மாற்றி அப்படியே பெரியமாமனிடம் கொடுத்தான். காசை முழுவதும் வேண்டிவிட்டுத்தான் மாமன் பெரிய குண்டொன்றைத் து¡க்கி ராஐ¡வின் தலையில்ப் போட்டான்.

"ராசா..! பிள்ளை பிறந்தால் வீட்டிலை இடம் பத்தாதுபோகும். நீ இந்த மாசத்தோட வேறெ எங்காவது இடம் பார்..!"

"நான் எங்க மாமா உடன வீடு எடுக்கிறது. கையில காசும் இல்லாம..." என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் ராஐ¡.

"அதுக்கு நான் என்ன செய்யிறது இவ்வளவுநாளும் சாப்பாடும் போட்டுட்டு காசும் தந்து உனக்கு வீடு எடுத்துத் தாறதுக்கு நான் என்ன பெரிய இலச்சாதிபதியே..!"

மேலே கதைப்பதற்கு எந்தச் சந்தர்ப்பமும் தராமல் மாமன் இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான்.

மாமி வயிற்றைத் தள்ளிக்கொண்டு பார்வையால் பிரியாவிடை தந்தாள்.

மாமனது வேண்டாத பேச்சுஇ ராஐ¡வின் மனதில் வைராக்கியத்தைப் பாச்சியது. அந்தக் கிழமையே வீட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று தீர்மானித்தான். அன்று பின்னேரம் சிவராசா வேலை செய்யும் ரெஸ்ரோரண்டிற்குப் போய் அவரிடம் நான்குவீத வட்டிக்கு ஆயிரம் டொலர்ஸ் வேண்டினான். வேலை இல்லாத ஒருவனுக்கு வட்டிக்கு காசு கொடுப்பதற்கு அவர் தயங்கினாலும் அவனது நிலமையை முழுவதும் கேட்டறிந்துவிட்டு வட்டிக்கு ஈந்தார்.

சொந்த பந்தங்களின் பக்கமே தலைகாட்டக் கூடாதென்ற வன்ம உணர்வில் மொன்றியல்நோர்த் பகுதியில் ஒருசிறு அறையுடன் கூடிய அப்பார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுத்து அடுத்தகிழமையே குடிபோனான்.

ராஐ¡ வெளியேறிய ஆறாவதுநாள், மாமனுக்கு பெண்குழந்தை பிறந்தது. ஒன்றுமில்லாத ண்டிக்கு அந்த சந்தோசச் செய்தியை அவர்கள் தெரிவிக்கவில்லை.

- ஜெயரூபன் (மைக்கேல்)

- (தொடர்ச்சி)

Quelle - பதிவுகள் - டிசம்பர் 2001,  இதழ் 24

No comments: