Wednesday, October 12, 2016

ஏழாவது சொர்க்கம் - 9

வெளிக்காற்று அடங்கிப்போக குளிரின் வீச்சு சற்றுக் குறைந்துவிட்டது. ஆனால் வீட்டுக்குள் ஹீட்டரின் வெப்பம் தணியாமல் அமுக்கமாக இருந்தது. அறைக்குள் ஒரே புழுக்கமாகி  ஆனந்தனின் உடம்பு சூடேறத் தொடங்கிவிட்டது. அவன் அச்சத்தை எவ்வளவுதான் இழுத்து து¡ர எறிந்தும் அது அடங்கமாட்டேன் என்று நழுவி ஓடிவந்து கொண்டிருந்தது.

அசம்பாவிதம் எதுவும் நடந்தால் சடாரென எழும்பி வெளியே ஓடிவிடுமளவுக்கு தயாராக அறைவாசல் பக்கமாகத்தான் படுத்திருந்தான். அன்றுபகல் பூராகவும் இடுப்புமுறிய செய்த வேலைக்களைப்பிற்கு இவ்வளவுநேரம் அடித்துப் போட்டதுமாதிரி உறங்கியிருக்க வேண்டும். எனினும் உறக்கச் சடைவில் கண்ணைமூட முயன்றால் படுக்கையில் சதா குந்திக்கொண்டிருக்கும் ராஐ¡தான் நினைவில் வந்தான். இப்போது என்ன செய்கிறான் என்று கவனிக்க தலையைத் து¡க்கிப்பார்த்தால் எங்கே தன்னில் கோபப்பட்டு அடித்து நொறுக்கி விடுவானோ என்று பயமாக இருந்தது. பைத்தியங்கள் அடிக்கும் என்று காலங்காலமாக நிலைத்துவிட்ட பிம்பத்தை ஆனந்தனால் ஒதுக்கித் தள்ளிவிட்டு சுகமாக நித்திரை கொள்ளமுடியவில்லை.

எதற்கும் விடிய அக்காவுடன் கதைத்து இதற்கு ஒரு முடிவுகட்டிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான். ராஐ¡ இந்தவீட்டுக்கு இருப்பதற்கு வந்த அன்றே கனடியன்ரைர் கடைக்குப் போய் பூட்டு வாங்கிவந்து தனது பெட்று¡ம் கதவுக்குப் போட்டுப்பூட்டி தன்னையும் மகளையும் காபந்து பண்ணிவிட்டாள் அக்கா. தனக்கு மட்டும்தான் இந்த நித்திரை இல்லாத இரவும் பயமும் தொல்லையும் என்று நொந்து கொண்டான்.

வெக்கையும் புழுக்கமும் வேறு உடம்பை நசநசக்க வைத்து வெறுப்பேத்துகிறது. ஐன்னலை சிறிது நீக்கிவிட்டு குளிர்காற்று வரச்செய்யக்கூட ஐன்னலைத் திறக்கவிடாப்பிடியாக ராஐ¡ மறுத்துவிட்டான். நன்றாகப் பூட்டியிருக்கும் கதவையும் ஐன்னலையும்கூட இரவுமுழுக்க கண்காணித்துக் கொண்டு ஆந்தைமாதிரி குந்தி இருக்கிறான்.

எப்போதும் வெறித்துப்போன பார்வையும்இ வெருண்ட முகத்தையும் பார்க்கவே ராஐ¡வின் அசாதாரண மனதை ஆனந்தனால் புரிந்து கொள்ளமுடிகிறது. இருந்தும் அமைதியாக இருந்துவிட்டு புயலடிப்பது மாதிரி ஏதாவது தண்டாமுண்டா செய்துவிடுவானோ என்றுதான் அவனுக்கு பயமாக இருந்தது.

விடிந்து நிலம் வெளுத்தபிறகு ராஐ¡வுக்கு நிம்மதி வந்தது. ஓயாது உசார்நிலையில் இருந்த மூளையும் ஓய்வு கொண்டது கூடவே நித்திரையும் வந்தது. இரவு பூராகவும் தன்னை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிவிட்டதில் மனநிறைவு வேறு ஏற்பட்டிருந்தது. பகலில் தன்னை யாரும் வந்து தாக்க முடியாது ஆகையால் தலையணையில் மெல்ல தலைவைத்துக் கொண்டான்.

ஆனந்தன் எவ்வளவு நல்லவன். தன்னுடன் சேர்ந்து துணையாக அவனும் இரவு முழுக்க நித்திரை கொள்ளாமல் காவல் காத்து முளித்துக் கிடந்தான். இன்றிரவு அவனை நிம்மதியாக படுக்கச் சொல்லிவிட்டு தான் தனியக் காவல் இருக்கவேண்டும். பாவம் அவன் வேலைக்கு போய்விட்டு வருபவன் ஏன் நித்திரை முளிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். யோசனையின் ஊடே ராஐ¡வுக்கு நித்திரை வந்தது.

தண்ணியை எத்தி முகத்தைக் கழுவ மிளகாய்த்து¡ள் பட்டதுமாதிரி கண்கள் எரிந்தது ஆனந்தனுக்கு. நேற்றிரவு என்றில்லை நான்கு இரவுகளாக போதிய நித்திரை இல்லை. நித்திரை இழுக்கும் போதெல்லாம் பைத்தியம் முற்றி ராஐ¡ தன் கழுத்தை நெரித்துவிடுவானோ என்ற பயத்தில் வந்த நித்திரையும் பறந்து போய்விடுகிறது.

அக்காவிற்கு தெரியாமலே நேற்று அவன் ஏற்பாடொன்று செய்துவிட்டான். இன்றிலிருந்து தனது நண்பனொருவன் வீட்டில் இரவில் தங்குவதென்று. இந்த விசயம் தெரிந்தால் அக்கா துள்ளிக் குதிப்பாள்  என்றாலும் ஒன்றும் செய்ய முடியாது. அத்தான்காரனுடன் இதுவரை எதுவும் பெரிதாகப் பேசிய பழக்கம் கிடையாது. அவனுக்கு தனது அத்தான் யோகலிங்கம் மீது பல வெறுப்புகள் இரண்டு வருடங்களாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. தன்னைக் கனடா கூப்பிட்டதற்கு செலவு மட்டுந்தான் வேண்டினேன் என்று ஊருக்குச் சொல்லிக் கொண்டு இரண்டு மடங்கு காசை ஏமாற்றி வேண்டிய போக்கி என்னும் கோபம் தணியமாட்டாமல் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தது. இப்போதுகூட இங்கு தங்கியிருப்பதற்கு சாப்பாட்டுக்காசு வேண்டாம். வாடகை மட்டும் தந்தால் போதும் என்று சொல்லிவிட்டு வாடகையிலேயே சாப்பாட்டுக்காசையும் சேர்த்து கறந்து கொள்கிறார். வெளியாட்களுக்கு அத்தானது சுயரூபம் தெரியவராது. மாறாக அவரது உதவிமனப்பான்மைதான் தெரியும்.

குளித்துவிட்டு அறைக்கு வந்த ஆனந்தனை வரவேற்றது ராஐ¡வின் குறட்டைச் சத்தம். மல்லாந்து விறைத்தது மாதிரி படுத்திருந்த ராஐ¡வின் இரண்டு கைகளும் தாக்குவதற்கு தயாராகியது போலஇ மு–டி இறுகியபடி இருப்பதைப் பார்க்க ஆனந்தனுக்கு விநோதமாக இருந்தது. அரவம் காட்டாமல் உடுப்பு மாற்றிக் கொண்டு சமையலறைக்கு வந்தான். தேத்தண்ணி வைத்துக் கொண்டிருந்த அக்கா தவமணி ஆனந்தனைக் கண்டதும் குரலைத் தாழ்த்தி குசுகுசுத்தபடிக்கு கேட்டாள்.

”பைத்தியம் எங்க.. நித்திரையோ முழிப்போ..?”

ஆனந்தனுக்கு அக்காவைப் பார்க்க எரிச்சல் வந்தது. நன்றாக நித்திரை கொண்ட மலர்ச்சி அவளது முகத்தில் தெரிந்தது. கூடவே சற்று வேடிக்கையாகவும் அவள் கேட்டபோது அடக்கியிருந்த ஆத்திரத்தை அவிட்டு விட்டான்.

”இனிமேயும் ஒருநிமிசம் என்னால இந்த வீட்டில இருக்கேலாது. நாலுநாளா நித்திரை இல்லாம ஒருமனிசன் என்னெண்டு வேலை செய்யிறதெண்டு யோசிச்சுப்பார்..!” எனக் கோபப்பட்டான் ஆனந்தன்.

”உதைப்போய் அத்தானிட்ட சொல்லுறதுக்கு என்னோடை ஏன் எரிஞ்சு விழுறாய். ஏன் நானே இந்த வீட்டில பைத்தியத்தை கூட்டியந்து கட்டி அழுதுகொண்டிருக்கிறது” என்று பதிலளித்தாள் தவமணி.

”விசரி.. பைத்தியம் பைத்தியம் எண்டாதை அவனுக்குக் கேட்டா முதல்லை உனக்குத்தான் மொத்து விழும்.”

ஆனந்தன் சொன்னதைக் கேட்டதும் தவமணிக்கு மிகவும் பயம் வந்துவிட்டது. கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போன்ற குரலில் மிகப் பரிதாபமாகச் சொன்னாள்.

”நான் என்னடா ஆனந்தா செய்யிறது.. நான் ஏதும் சொல்லப்போக தன்ரை ஆக்களைப்பற்றி குறை சொல்லுறன் எண்டு என்னோடை ஏறிவிழுவார். உனக்குத் தெரியுந்தானே உவள் மதுவந்தியைப் பார்..! எந்தநேரமும் வெருண்டு கொண்டு கிடக்கிறாள்.”

கேற்றில் விசிலடித்து தான் சூடாகிவிட்டதைத் தெரியப்படுத்த அக்கா மூக்கை உறிஞ்சியபடி தேத்தண்ணி கலந்தாள்.
ஆனந்தனுக்கு இப்போது அக்காமீது பரிதாபம் வந்துவிட்டது.

”சரி.. சரி காலங்காத்தால ஏன் அழுகிறாய்”
என்று அக்காவை சமாதானப் படுத்தியபடிக்கு பாணை எடுத்து ரோஸ்ரரில் நுழைத்து தனக்கான சாண்ட்விச்சை தயார்ப்படுத்த தொடங்கினான்.

மத்தியானச் சமையல் எல்லாவற்றையும் ஒப்பேற்றிவிட்டு சிறிது செற்றியில் ஆற அமர்ந்தபோதுதான் தவமணிக்கு தன் தனிமை பகீரென்று நெஞ்சைத் தாக்கியது. மதுவந்தி ஸ்கூலுக்கு சென்றுவிட்டாள். ஆனந்தனும் யோகலிங்கமும் இல்லாத இந்த நேரம் ராஐ¡ ஏதாவது கோபதாபத்தில் தன்னைத் தாக்கிவிடக்கூடும் என்ற  பயம் தொற்றிக்கொள்ள அவளுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இவ்வளவு நேரமும் இதைப்பற்றி தான் நினைத்துக்கூடப் பார்க்காமல் தனிய நின்றிருக்கிறேனே.! ஆண்டவா..!! அவன்பாவிக்கு பெரியமாமனைவிட என்னிலைதானே சரியான கோபம் இருக்கும். என்று அஞ்சல் ஓட்டத்தில் ஒன்றையொன்றைத் துரத்தியபடி ஓடியது தவமணிக்கு இதுவரை தான் ராஐ¡வுக்கு செய்த திருகுதாளங்கள்.

சாப்பிடக்கூட முனையாமல் மளமளவென்று உடுப்பு மாற்றினாள். எங்காவது வெளியில் சுற்றிவிட்டு கணவனும் மகளும் வந்தபிறகு வரலாமென்று கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே கால்வைத்தாள். அதன்பிறகுதான் படக் படக்கென்று அடித்த அவளது இதயம் சாந்தமாகியது.

நல்லாக வெறியைப் போட்டுவிட்டு மல்லாந்துவிடும் தனது புரு‘னுக்கு அவளது கஸ்ரங்கள் தெரியவராது. தனக்கும் மகளுக்கும்தான் எங்கே எதுவும் நடந்துவிடுமோவென்ற பயம் இருபத்திநாலு மணித்தியாலமும் கிடந்து ஆட்டுகிறது. காசு பணம் இருந்தும் இப்படி நிம்மதி இல்லாமல் வாழுறது என்ன வாழ்க்கை என்று வெறுப்பு வந்தது அவளுக்கு.

“கள்ளச் சபாலிங்கம் பெண்டிலுக்கு ஒரு கஸ்ரமும் இல்லை. அவன்ரை காசையும் காரையும் ஏமாத்திப் புடுங்கிப் போட்டு நிம்மதியா நித்திரை வேற கொள்ளுறாள்“ என்று வீதியில் புறுபுறுத்தபடி சொப்பிங் சென்டரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் தவமணி.

சாயங்காலம் நாலுமணிக்கு முழிப்பு வந்தது ராஐ¡வுக்கு. முழிப்புக்கண்டதும் வயிறு பசியில் காந்துவதை உணர்ந்தான். வீட்டில் எந்த அரவத்தையும் காணவில்லை. தன்னைத் தனியே விட்டுவிட்டு ஒரு பொறுப்பில்லாமல் எல்லோரும் வெளியே போய்விட்டார்களே யாராவது எதிரிகள் வந்து என்னை அடித்துக்கொன்று விட்டால் என்ன செய்வது என்ற பதகளிப்பு உடனே அவனிடம் தொற்றிக்கொண்டது. சட்டென்று எழும்பி சமையலறைக்குள் நுழைந்து கத்தியைத் தேடி எடுத்து கையில் வைத்துக் கொண்டான்.

எதிரிகள் உள்நுழையக்கூடிய வழிகள் எல்லாவற்றையும் முதலில் அடைத்துவிடவேண்டும். சமையலறை ஐன்னல் நன்றாகப் பூட்டியிருந்தது. உடுதுணிகள் வைக்கும் குளோசற் பாத்ரூம் எல்லாவற்றையும் சோதித்துவிட்டான். ஆனால் பெரியமாமனது பெட்ரூம் கதவு பூட்டியிருந்ததால் அந்த அறை ஐன்னல் சாத்தி இருக்கிறதா என்று தெரியவில்லை. உள்ளுக்குள் யாராவது எதிரிகள் நிற்கிறார்களோ என்ற சந்தேகமும் வந்தது. கதவைத் தள்ளித் திறந்து பார்த்தான். திறக்கமுடியவில்லை. சிறிது நேரம் கத்தியை ஓங்கிபிடித்தபடி ஆடாமல் அசையாமல் நின்றுஇ உள்ளே யாராவது நடமாடுகிறார்களா என்று அரவங்கேட்டான். அறைக்குள் எவ்வித சத்தமும் இன்றி அமைதியாக இருந்தது. ஆனாலும் நம்பமுடியாது தான் போவதற்கு திரும்பும்போது சடாரெனக் கதவைத்திறந்து தலையில் தாக்கிவிடக்கூடும். ஆகையால் கத்தியைத் தயாராகப் பிடித்தபடி ரிவர்சில் நடந்து சமையலறைக்குள் வந்தான்.

ராஐ¡வுக்குப் பசித்தது. சமையலறையில் சாப்பாடு எல்லாம் தயாராக இருந்தது. சாப்பிடும்போதுகூட தனக்கு ஏதாவது தாக்குதல் நடந்துவிடலாம் என்று அவனது உள்ளுணர்வு சொன்னது. உடனே திரும்பவும் பெட்ரூம் கதவுக்கருகே வந்தான். உறுதியாக நிலையெடுத்து நின்றுகொண்டுஇ காலால் ஓங்கிக் கதவை உதைந்தான். கதவுப்பலகை கிழிந்து கொண்டு பூட்டு விலகியது. இப்போது உள்ளே நன்றாகப் பார்க்க முடிந்தது. உள்ளே யாரும் இல்லை என்று தெளிவாகியதும் நிம்மதியாக இருந்தது.

கோழிஇறச்சிக் குழம்பும் கத்தரிக்காய் பால்க்கறியும் பெரியமாமி சமைத்து வைத்திருந்தாள். தானே சாப்பாட்டைப் போட்டுக்கொண்டு சாப்பாட்டு மேசையில் இருந்து சாப்பிட்டான். வயிறு நிறைந்தது. தண்ணிக்குப் பதில் ·ப்ரிகஐ¥க்குள் இருந்த பாலை எடுத்துக் குடித்தான். பால்தான் உடம்புக்கு நல்ல பலம் தரும். உடம்பு பலமேறினால் யாரும் தன்னை அசைக்க முடியாது. இரண்டுகிளாஸ் நிறையப் பாலைக் குடித்து சத்தமாக ஏவறைவிட்டு தானே “சொறி“ சொல்லிக் கொண்டான். கத்தியை எடுத்துக் கொண்டு அறைக்கு வர மீண்டும் நித்திரை வந்தது. வீட்டுக்கு ஆட்கள் வரும்வரை நித்திரை கொள்ளமுடியாது.  ஆகவே படுக்கையில் இருந்து கொண்டு கத்தியை அருகே வைத்துக் கொண்டான்.

அதே காவல்நிலையில் இரண்டு மணித்தியாலமாக இருந்தபிறகு¡தன் வெளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உடனே உசாராகி கத்தியை கையில் எடுத்துக் கொண்டான். உடுப்புக்கள் தொங்கவிடும் குளோசற்றுக்குள் ஒளித்துக்கொண்டுஇ காதைத்தீட்டி யார் உள்ளே நுழைவது எனக் கவனித்துக் கேட்டான். மதுவந்தியின் குரல் கேட்டது. அதைத் தொடர்ந்து பெரியமாமனது குரலும் கேட்டது. நிம்மதியாகத் திரும்பிவந்து படுக்கையில் சாய்ந்து மறக்காமல் கத்தியை எடுத்து தலையணைக்குள் ஒளித்து வைத்தான்.

”டாடி.. டாடி.. கதவு உடைஞ்சுபோச்சு”

என்ற மதுவந்தியின் குரலைக்கேட்டு யோகலிங்கம் ஓடிவந்து பார்த்தான். பெட்ரூம் கதவு கிழிந்துபோய் ஓவென்று கிடந்தது. அவனுக்கு உடனே விர்ரென்று ஏறியது ராஐ¡வின் மீது அடக்கமுடியாத கோபம். ராஐ¡வை தனியாக வீட்டில் விட்டுவிட்டுஇ சதிராடப் போய்விட்ட தவமணியிலும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ”நட்டுக்களண்டவனை வீட்டை நாசமாக்க விட்டிட்டு கொம்மா எங்க போனவள்” என்று மதுவந்தியைப் பார்த்துத் திட்டிக் கொண்டு ராஐ¡ இருந்த அறைக்குள் போனான்.

”டேய் மடையா அருமந்த கதவை உடைச்செறிஞ்சிருக்கிறியே... உனக்கென்ன விசரே பிடிச்சிருக்குது. போயும் போயும் உன்னைப் பிடிச்சு கனடா கூப்பிட்டதுக்கு என்னைச் செருப்பால அடிக்கோணும். பசாசு..!”

யோகலிங்கம் ராஐ¡வைத் திட்டிநொறுக்கிக் கொண்டு அடிப்பதற்கு கையை ஓங்கினான். உடனே பயத்தில் வெருண்டு போய் தலையை இரண்டு கைகளாலும் பொத்திக்கொண்டு ”அடிக்காதை பெரியமாமா.. அடிக்காதை பெரியமாமா..!” என்று குனிந்து கொண்டு முனகினான்.

”ஏன்ரா நாயே கதவை உடைச்சனி.. நீயே பூட்டு வேண்டிப் போட்டனி படவா..!”

”இல்லைப் பெரியமாமா அது பூட்டிக்கிடந்துது உள்ளை ஆராவது ஒளிச்சிருப்பாங்கள் எண்டு திறந்து பாத்தனான்.”

”டேய் மடையா.! பூட்டின வீட்டுக்கை எவன் வருவான். உப்பிடி அட்டூளியம் செய்தியெண்டா விசராஸ்பத்திரியில கொண்டேப் போட்டிடுடுவன். கவனம்..!”

”இல்லைப் பெரியமாமா.. இனிமே உடைக்கமாட்டன்” என்று வேகம்வேகமாக தலையை ஆட்டிக் கொண்டு பதில் சொன்னான் ராஐ¡.

யோகலிங்கத்திற்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. இவனை இப்படியே விட்டால் பெரிய தொந்தரவுகளைத் தந்துவிடுவானோ என்ற பயமும் வந்தது. அதைவிட மகள் மதுவந்தி அச்சத்தில் உறைந்து போய் பேச்சுமூச்சற்று செற்றியில்  இருப்பதைப் பார்க்க இன்றே இவனுக்கு எங்காவது வேறொரு இடம் ஏற்பாடு செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

மருமகனின் இந்த நிலையை நினைக்க பெரும் கவலை வந்தாலும் யோகலிங்கத்தின் சுயநலமூளை இந்தப் பாரத்தை தாங்கவிரும்பவில்லை.

செற்றியில் தனது மகளுக்கு அருகே இருந்து நாடிதாங்கி பலநிமிசமாக யோசித்தான். ஒருவழியுமே பிடிபட மாட்டேன் என்றது. எதற்கும் தம்பி சபாலிங்கத்துடன் கலந்தாலோசிப்பதுதான் நல்லது என்று எண்ணினான். இருவருக்குள்ளும் கதைபேச்சு போக்குவரத்து நின்றுபோய் பலவரு‘ங்களாகி விட்டது. இப்போது தானே வலியப்போய் தம்பியுடன் கதைப்பதா என்று சங்கைப் பட்டது அவனது மனது. ஆனாலும் ரெலிபோனை எடுத்து நம்பரை டயல் பண்ணினான்.

சபாலிங்கத்தின் முடிவுதான் சரியென்று தெரிந்தது. தாங்கள் இரண்டுபேரும் குடும்பஸ்தர்கள். அத்துடன் நாளைக்கு குமராகிவிடும் பிள்ளைகள் வேறு வீட்டில் இருக்கிறார்கள். பேசாமல் ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் ராஐ¡வை அட்மிட் ஆக்கிவிடுவதுதான் நல்லது. அதற்குப் பிறகு அவங்கள்ஆச்சு இவனாச்சு அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காமல் விட்டால் கதை முடிஞ்சுது.

தவமணி வீடுதிரும்பும்வரை செற்றியிலேயே குந்தி இருந்தான் யோகலிங்கம். தவமணி வந்ததும் நடந்ததைக் கேட்டு நெஞ்சைப் பொத்திக் கொண்டு செற்றியில் இருந்துவிட்டாள். கதவுக்கு விழுந்த உதை தனக்கு விழுந்திருக்க வேண்டியது ஆனால் தனது சாமர்த்தியத்தால் தப்பிவிட்டேன் என்பது அவளது வாதம்.

சித்தப்பா வீட்டுக்கு வரச்சொல்லியதற்கு பிறகு மதுவந்தி அங்கு போவதற்கு தகப்பனிடம் நச்சரித்தபடி இருந்தாள் அவளுக்கு யசோதராவுடனும் பிரியங்காவுடனும் விளையாடக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட விருப்பமில்லை. மகளின் ஆய்க்கினையாலும் இன்னும் திருப்திகரமாக திட்டம் போடுவதற்காகவும் யோகலிங்கம் தவமணியையும் இழுத்துக் கொண்டு சபாலிங்கம் வீட்டுக்குப் போனான்.

பெரியமாமன் நடத்திய ரெலிபோன் உரையாடலை மிகத் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்த ராஐ¡வுக்குஇ தன்னை முழுப்பைத்தியம் ஆக்கி விட்டார்களே என்று ஆத்திரம் முட்டியது. வெறும் சப்புப்பலகைக் கதவு உடைஞ்சதுக்கு இந்தத் துள்ளுத் துள்ளுற கள்ளப் பெரியமாமன் இந்த வீட்டிலை நிறைஞ்சு கிடக்கிற தளபாடங்களும் ரெலிவி‘னும்இ ரேப்செற்றும் தான்தானே வேண்டிக் குடுத்தது என்பதை மறந்து விட்டா§ன் என்ற ஆக்ரோசம் வந்தது.

அறையை விட்டு வெளியே வந்து எல்லாவற்றையும் ஒருமுறை வடிவாகப் பார்த்தான். இத்தாலியமொடல் பெட்ரூம்செற் இரண்டாயிரத்து எழுநு¡று டொலர்ஸ்  ரெக்னிக்ஸ் ரேப்செற் ஆயிரத்து ஜந்நு¡று டொலர்ஸ் ஹோலில் கிடந்த பீத்தல் ரெலிவி‘னை து¡க்கி எறிஞ்சு போட்டு நான் வாங்கிக்குடுத்த சொனிரெலிவி‘ன் தொள்ளாயிரம் டொலர்ஸ் இந்தச் செற்றிவேற ஆயிரம் டொலர்ஸ் அதுவும் அரச சிம்மாசனம் போல வேணுமெண்டு தேடி எடுத்துக் குடுத்தது. இவ்வளவுக்கும் பிறகு நான் பைத்தியமோ ராஸ்கல்..!

”என்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பப் போறியளோ அப்ப உங்களுக்கு என்னத்துக்கு நான் வேண்டித் தந்த சாமான்கள்”

தனக்குள்ளே கறுவிக்கொண்டு ஓடிப்போய் சாமிபடத்துக்கு சாம்பிராணி கொழுத்த வைத்திருந்த நெருப்புப்பெட்டியை எடுத்து வந்து உரசி உரசி செற்றியில் எறிந்தான். பல யத்தனங்களுக்குப் பிறகுதான் செற்றியில் ஒழுங்காக நெருப்புப் பிடித்தது.

அவன் இவ்வளவு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. செற்றி புகார்ப்பத்தி எரிந்தது. வீட்டுக்குள் சுவாசிக்க முடியாமல் புகை சூழ்ந்து மூச்சு முட்டியது. ஹோலுக்கு விரித்திருந்த சின்னக் கார்ப்பெட்டை உருவி செற்றியில் போட்டு நெருப்பை அணைக்க முயன்றான். மனித முயற்சியை நெருப்பு தோற்கடித்து பொசுக்கியது. அலையலையாக நாக்கை நீட்டி அது கோரநடனம் ஆடத் தொடங்கியது.

அங்குமிங்குமாக ஓடித்திரிந்தான்இ எப்படி நெருப்பை அணைப்பது என்று தெரியாமல் கண்ணுக்குப்பட்ட பொருட்களை எல்லாம் து¡க்கி தீயின்மீது எறிந்தான். ·பயர் அலாம் கீச்சிடத் தொடங்கியதும் பயத்தினால் அவனது உடம்பு பதறியது. இனிமேலும் நிற்கமுடியாது ஆட்கள் வரப்போகிறார்கள் என்ற ஐ¡க்கிரதை உணர்வு உந்தஇ எமர்¦ஐன்ஸிக்கதவைத் திறந்து கொண்டு கராஐ¥க்குள் ஒடினான்.

அந்த அப்பார்ட்மெண்டில் வசித்த சகலரையும் வெளியேற்றி உடனுக்குடன் தீயணைப்புப் பிரிவின் பஸ்ஸில் ஏற்றினார்கள். ராஐ¡வை மட்டும் கைவிலங்கிட்டு ஒரு பொலிஸ்காரில் ஏற்றினார்கள்.

- ஜெயரூபன் (மைக்கேல்)

- (தொடர்ச்சி)

Quelle - பதிவுகள் - ஏப்ரல் 2002, இதழ் 28

No comments: