Wednesday, October 12, 2016

ஏழாவது சொர்க்கம் - 8

அவனது பார்வை வெறித்திருந்த இருண்ட ஐன்னலில் இருந்து வானம் வெளுத்தது. மின்சாரக்கம்பியில் இரவைக் கழித்த மாக்பைப்பறவை சிறகைக் கோதி நெட்டிமுறித்துஇ அந்தப்புதிய நாளை எதிர்கொண்டு தீனி தேடி எழும்பிப் பறந்தது. நரைத்த வானத்தை கிளித்துக் கோடு போட்டிருந்த மின்சாரவயர்களை காற்று அதட்டியது. உலகம் மெல்ல மெல்ல விடிந்து வர அவனது மனம் மேலும் இருட்டுப் பூசியது.

அடுகிடை படுகிடையாக ராஐ¡வுடன் ஒட்டிக்கொண்டு திரிந்த ஐ¢ஸிலை நான்கு நாட்களாக இந்தப் பக்கமே காணவில்லை. செற்றிமூலையில் குந்தி இருந்த ராஐ¡வின் வயிறு பசியில் பற்றி எரிகிறது. இடத்தை விட்டு எழும்பி தேத்தண்ணி போட்டுக் குடிக்கவும் அவனுக்குப் பயமாக இருக்கிறது. எந்த நேரமும் எதிரிகள் தாக்க வரக்கூடும் என்ற அச்சம் சிலந்திவலை போல பின்னிப் படர்கிறது. அவனுக்கு இரவும் பகலும்கூட பேதமற்றுப் போய்விட்டது. சிறுசிறு சத்தம் கேட்டாலும் உடல்சிலிர்த்து பயத்தால் நடுங்குகிறது. விடிந்ததிலிருந்து ரெலிபோன் ஓயாது ஒலித்தபடி இருக்கிற ஆனால் அதனருகே போவதற்கு இந்த இடத்தைவிட்டு எழும்பமுடியாது. அவனை இந்த இடத்தை விட்டு நகரச்செய்து அடித்து கொன்றுவிடத் துடிக்கும் எதிரிகள்தான் ரெலிபோன் மூலம் சதிசெய்கிறார்கள் என்று பூரணமாக நம்புகிறான்.

இறச்சிவெட்டும்கத்தி சுத்தியல் குறடு இன்னும் அந்த அப்பார்ட்மெண்டுக்குள் இருந்த இரும்பு உபகரணங்கள் எல்லாவற்றையும் சேகரித்து கட்டிலுக்குக் கீழே ஒளித்து வைத்துவிட்டாயிற்று. ·ப்ரிகஐ¥க்குள் ஒளித்திருந்து எதிரிகள் தன்னைத் தாக்கி விடக்கூடும் என்பதால் அதன் கதவைத் திறந்து விட்டிருந்தான். ·ப்ரிகஐ¢லிருந்து தண்ணீர் வடிந்து கார்ப்பெட் நனைந்து விட்டது. செற்றிக்கவரை உருவி தன்னை முழுமையாகப் போர்த்திக் கொண்டு குறங்கி செற்றிமூலையில் இருந்த ராஐ¡வுக் தன் அப்பார்ட்மெண்ட் ஆளோடியில் யாரோ நடக்கும் காலடிஓசை கேட்டது. காலடிச்சத்தம் வரவர தனது அப்பார்ட்மெண்ட் கதவை நெருங்கி வருவதுபோல பிரமை உண்டானது. காதைத் தீட்டி மனதை ஒருமைப்படுத்த முயன்றான். உடம்பு நடுங்கியது. எதிரிகள்தான் வருகிறார்கள் என்ற எண்ணம் உச்சநிலையை அடைய அவனையறியாமல் சாரத்துடன் சிறுநீர் கழிந்துவிட்டது. சூடான மூத்திரம் காலை நனைத்துக் கொண்டு செற்றியில் ஊறியது.

இப்போது அவனது அப்பார்ட்மெண்ட் கதவு தடதடவென தட்டுப்பட்டது. தட்டும் கதி கூடக்கூட அவனது நெஞ்சில் எதிரிகள் மாய்ந்து மாய்ந்து தாக்குவது போல இருந்தது. உடனே செற்றிக்கவரால் தலையையும் இழுத்து மூடிக்கொண்டு நடுங்கினான்.

"ராஐ¡..! ராஐ¡..!" என்று கூப்பிடும் சத்தம் அவனுக்கு கேட்டது. அவனுக்கு வெளியிலிருந்து வந்த குரலை இனங்காண முடிந்தது. வந்திருப்பது ரஞ்சன். இருந்தும் கதவைத்திறக்க முடியாது. எதிரிகள்கூட குரலை மாற்றிக் கூப்பிடக்கூடும் ஆகையால் சிறுஅசைவுமற்று உறைந்து போய் இருந்தான்.

"ராஐ¡.. ராஐ¡..! கதவைத்திறவுங்கோ நான் ரஞ்சன் வந்திருக்கிறன்."

பத்துத்தடவைக்கு மேல் ரஞ்சன் கூப்பிட்டதற்குப் பிறகுதான் ராஐ¡ பதில் எழுப்பினான்.

"நான் திறக்கமாட்டன். நீ அடிக்க வந்திருக்கிறாய்."

"ராஐ¡. நான் உன்ரை பிரெண்ட் ரஞ்சன் வந்திருக்கிறன் கதவைத்திற பிளீஸ்..! உனக்கு சாப்பாடும் கொண்டு வந்திருக்கிறன்."

"நீ.. சாப்பாட்டுக்கை விசம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். நான் திறக்க மாட்டன்."

"ராசாண்ணை.. நான் உன்ரை தம்பியல்லே.. பிளஸ் கதவைத் திற..!"

ராஐ¡வுக்கோ அகோரப்பசி. ரஞ்சன் சாப்பாடு என்று சொன்ன சொல் திரும்பத் திரும்ப மூளையில் எதிரொலித்தபடி இருக்க மெல்ல செற்றியை விட்டு எழும்பினான். ஒரு பூனையைப் போல மெத்தடி வைத்து கதவருகே வந்து திறந்து விட்டதும் சடாரென ஓடி பாத்ரூமுக்குள் ஒளிந்து கொண்டான்.

கதவைத்திறந்து அறைக்குள் நுழைந்த ரஞ்சனுக்கு குப்பெனத் தாக்கியது மூத்திரமணம். ஹோல் முழுக்க கஞ்சலும் குப்பையும் நிறைந்து வீடே அழுக்கில் துர்நாற்றமடித்தது. சுற்றுமுற்றும் ராஐ¡வைத் தேடினான். பாத்ரூமுக்குள்ளால் அச்சத்தில் இருண்ட ராஐ¡வின் முகமும் தலையில் ஒட்டியிருந்த வெள்ளைப் பிளாஸ்ரரும் தெரிந்தது.

சிறுகுழந்தையைப் போல ஒளித்துப் பார்க்கும் ராஐ¡வைக் கண்டதும் ரஞ்சனின் நெஞ்சிலிருந்து வேதனை கிளம்பி மூச்சை அடைத்தது.

யாருக்கும் அஞ்சாத ராஐ¡வின் கம்பீரமும் வேலைத்தலத்தில் அவனது திறமையும் வேகமும் எங்கே போய்விட்டது..? அதைவிட ரஞ்சனின் மனைவியைக் கூப்பிட காசில்லாமல் அலைந்தபோது கத்தையாக பத்தாயிரம் டொலசைத் து¡க்கிக் கொண்டு வந்து தந்த மனிதாபிமானமும் எங்கே மறைந்தது..? மனிதனை ஆசைகாட்டி ஆடவிட்டு அட்டூளியம் புரியவைத்து இறுதியில் அவனது கழுத்தை நெரித்து முடமாக்கிவிடும் விதியின் கையை யார் தடுப்பார்..?

எண்ணச்சுமையுடன் ராஐ¡வைக் கையைப் பிடித்து பாத்ரூமுக்குள்ளால் அழைத்து வந்து செற்றியில் இருத்தினான் ரஞ்சன். அப்போதும் செற்றி மூலைக்குள் ஒடுங்கிக் கொண்டு ரஞ்சனை மிரள மிரளப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஐ¡.

"ராஐ¡ தேத்தண்ணி போட்டுத் தரட்டே..?"

"எனக்குப் பசிக்குது" என்றான் ஒரு சின்னக் குழந்தையைப் போல ராஐ¡.

ரஞ்சன் தான் கொண்டுவந்த டிபன்பொக்சைத் திறந்து ராஐ¡வின் கையில் கொடுத்தான். அதீத நடுக்கத்துடன் டிபன்பொக்சை வேண்டிய ராஐ¡ கை கழுவக்கூட முயலாமல் இடியப்பத்தைக் குழைத்து பெரிய பெரிய கவளமாக அள்ளிச் சாப்பிடத் தொடங்கினான். கிளாசில் தண்ணி கொண்டு வந்து வைத்துவிட்டு வீட்டை ஒழுங்கு படுத்த முயன்றான் ரஞ்சன்.

அடுப்படிக்குள் இருந்த நனைந்த கார்ப்பெட்டை து¡க்கி பல்கனியில் போடுவதற்குஇ ஹோல் ஐன்னலைத் திறப்பதற்கு ரஞ்சன் முயல சாப்பாட்டைத் தரையில் வைத்துவிட்டு எழும்பி உள்ளே ஓடமுயன்றான் ராஐ¡.

"திறக்காதை திறக்காதை அவங்கள் வந்து அடிச்சுப் போடுவாங்கள்". என்று பரிதாபமாக முறையிட்டான் ரஞ்சனிடம்.

"ராஐ¡ ஆரும் உன்னை அடிக்க மாட்டாங்கள். நீ இருந்து சாப்பிடு. நான் இருக்கிறன் இஞ்ச ஆர் வருவாங்கள் வடுவாக்கள்..! பாப்பம் ஒரு கை. நீயும் நானும் சேந்து கும்மித் துலைச்சுப் போடமாட்டமே..!"

ரஞ்சன் கூறியதைக் கேட்டதும் உற்சாகம் வந்தது ராஐ¡வுக்கு. ஈ..ஈ.. எனச் சிரித்தபடிக்கு திரும்பவும் சாப்பிடத் தொடங்கினான்.

"நீ அவங்களை கட்டிப்பிடி..! நான் சுத்தியலால அடிக்கிறன் என்ன"

என்று வாய்க்குள் இடியப்பத்தை அடக்கிக் கொண்டு வீரம் பேசினான் ராஐ¡.

இந்த உற்சாக மனநிலையைக் கண்டதும் ரஞ்சனும் சந்தோசமடைந்தான். அவனுக்கு ராஐ¡விடம் பேசுவதற்கு விடயமொன்று இருந்தது. இவனை இங்கிருந்து மெல்லக் கிளப்பிக் கொண்டுபோய் பெரியமாமனது வீட்டில் சேர்த்துவிடும் ஆயத்தத்துடன் ராஐ¡வின் பெரியமாமன் யோகலிங்கத்திடம் வாதாடி ஒப்புக் கொள்ள வைத்திருந்தான்.

"ராஐ¡..! சாப்பிட்டபிறகு வெளிக்கிட்டுக் கொண்டு நாங்கள் வெளியால போவம் என்ன?"

வெளியால போகவேண்டும் என்றதும் சந்தோச மனநிலை மாறி திரும்பவும் மிரட்சி அவனது முகத்தில் குடியேறிவிட்டது. சாப்பிட்ட இடியப்பக்குழையல் வாய்க்குள் தெரிய வாயை ஆவென்று திறந்தபடி நினைவில் மூழ்கிப் போனான்.

"ராஐ¡.. ராஐ¡.. முதல்லை சாப்பிடுங்கோ..! என்னோடை வெளியில வரேக்கை ஒரு துரும்பு உங்களில படேலுமே அதுவும் நாங்கள் யோகலிங்கமண்ணர் வீட்டைதானே போகப்போறம்."

"நான் மாட்டன்.. நான்மாட்டன்... கள்ளப்பெரியமாமன் வீட்டை நான் வரமாட்டன். அவன்தான் ஆளை வைச்சு எனக்கு அடிப்பிச்சவன்."

"இல்லை ராசாண்ணை நடந்ததைக் கேள்விப்பட்டதும் அந்தாள் கலங்கிப் போச்சு பாவம்..! உங்களை உடன பாக்கோணும் எண்டு சொன்னது"

"அப்ப போவம் ஆனா மதுவந்திக்கு சொக்கிலேட் வேண்டிக்கொண்டு போகோணும்"

ராஐ¡ இந்தமட்டுக்கு வர இசைந்ததே ரஞ்சனுக்கு பெரிய வெற்றியாக இருந்தது. இருந்தும் யோகலிங்கம் வீட்டில் ராஐ¡வைத் தங்க வைப்பதற்கு சம்மதம் பெற நேற்றிரவு தான் பட்ட கஸ்ட்டத்தை நினைத்துப்பார்த்தான். எவ்வளவு எடுத்துக் கூறியும் சம்மதிக்க மறுத்துவிட்டான் யோகலிங்கம். முதலில் தனது மனைவி குழந்தைகளுக்கு விருப்பமில்லை என்று சாட்டுச் சொல்லி தட்டிக்கழிக்கப் பார்த்தான். சாம பேத தானங்கள் என்ற வரிசையில் முயன்று முடியாமல்ப் போக இறுதியில் தண்டத்தை பாவித்துத்தான் அவனை இணங்க வைக்க முடிந்தது.

"இப்ப மூளை கலங்கிப் போய் இருக்கிறான் து¡ள் வித்த காசை உங்களிட்டைத்தான் தந்து வைச்சிருக்கிறன் எண்டு பொலிசுக்குக் கிலிசுக்கு சொல்லித் துலைச்சான் எண்டா உங்களுக்குப் பெரிய தலையிடியாப் போடும். அதைவிட அவன் சுகப்படுற வரைக்கும் கூடவைச்சுப் பாத்திட்டு வெளியால விட்டா நல்லது. எனக்கென்ன உங்கட நன்மைக்குத்தான் சொல்லுறன்."

என்று ஒரு கூரிய அம்பை விட்டதும் மெல்ல சம்மதம் தந்து விட்டான் யோகலிங்கம். ஆனாலும் நிறைய சட்டதிட்டங்கள் போட்டுவிட்டுத்தான் இன்று காலை கூட்டிவரச் சொன்னான்.

ராஐ¡ பேசாமல் வீட்டில் இருப்பான் ஆனால் வைத்திருப்பதாகவும் கத்திக் குளறி லு¡ட்டி அடித்தால் வெளியால விரட்டி விடுவேன் எனவும் ரஞ்சனிடம் கூறினான் யோகலிங்கம்.

ஏதோ ரஞ்சன்தான் ராஐ¡வுக்கு உறவினன் மாதிரியும் ரஞ்சனது முகத்துக்காக தன் மருமகனை வீட்டில் வைத்திருக்க இசைந்திருப்பது போலவும் பட்டது.

மனிதர்களின் மனதுகளில் இருந்த நேசம் அன்பு தயவுதாட்சணியங்கள் எல்லாவற்றையும் சுயநலம் என்ற மகாராட்‘சன் விழுங்கி ஏப்பமிட்டுவிட்டான். இதில் உறவுகள் பந்தங்களுக்குள் கூட அவன் விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் வளித்துத் துடைத்துவிட்டான். அதுவும் நாடு கடந்து இங்கு வாழும் அந்நியதேசத்தில் அரவணைத்து வாழவேண்டிய பந்தங்கள் காசு பணத்தால் முகத்தை மூடிமறைத்து பார்வை இழந்து விட்டன.

தோய்த்து நாளாகிவிட்ட இரண்டு ஐ£ன்சுகளையும் ஒன்றிரண்டு ரீசேட் சாரம் ஐட்டி என்பவற்றை §‘¡ல்டர் பாக்கில் எடுத்து வைத்து ஆயத்தப்படுத்தினான் ரஞ்சன்.

"மதுவந்தியைப் பாத்திட்டு உடன திரும்பி வாறதுக்கு என்னத்துக்கு உடுப்பு பாக்?" என்று ஐமிச்சப்பட்டுக் கேட்டான் ராஐ¡.

"ராசாண்ணை..! அப்பிடியே இரண்டுநாள் என்ர வீட்டில இருந்திட்டு வாங்கோ. இஞ்ச தனிய இருந்து உங்களுக்கு போரடிச்சிருக்கும்."

"அப்ப சரி உன்னோடை இருந்தா ஒருத்தரும் வரேலாது..! போவம்."

"உப்பிடியே வரப்போறியளே போய் கால்முகம் கழுவிட்டு வெளிக்கிடுங்கோ"

என்று ராஐ¡வை பாத்ரூமுக்கு அனுப்பினான் ரஞ்சன்.

ராஐ¡ பாத்ரூம் போனதும் அறைக்குள் இருந்த ரெலிபோன் கனெக்சனைக் கழட்டிவிட்டு ·பிரிகஐ¥க்குள் இருந்த குறைச்சாப்பாடுகளை குப்பைத் தொட்டியில் கொட்டி அதை எடுத்து வெளியால் எறிந்து வீட்டைத் தயாராக்கினான். இப்போதைக்கு இந்த அப்பாட்மெண்டுக்கு ராஐ¡ திரும்பி வரமுடியாது அவனது மாறாட்டமும் பயமும் இடம்மாறி இருப்பதால் நாளாவட்டத்தில்தான் சுகப்படும். அதுவரை தான்கூட இங்கு வருவதைத் தவிர்த்து விடவேண்டும். இப்போதுகூட ராஐ¡ இந்த அப்பார்ட்மெண்டுக்குள் எங்காவது து¡ள் பார்சல்களை ஒளித்து வைத்திருக்கக்கூடும். அவனில்லாத நேரம் தான் இங்கு வந்து ஆபத்தைவிலைக்கு வேண்டமுடியாது.

???

வேண்டா வெறுப்பாக "வாங்கோ" என்று வரவேற்றான் யோகலிங்கம். செற்றியில் இருந்து பலநிமிசமாயும் மெளனம் நீடித்தது. யாரும் சம்பாசனையைத் தொடங்கவில்லை. சும்மா வந்து தலையைக் காட்டிவிட்டு சமையலறைக்குள் மறைந்து விட்டார் தவமணி மாமி.

புதிதாகக் கனடா வந்த பிரகிருதி மாதிரி ரெலிவி‘னையும் ரேப்செற்றையும்இ சுவர் அலுமாரியையும் பேந்தப் பேந்த பார்த்தபடி இருந்தான் ராஐ¡. அவனது மனத்தில் லேசாக ஒரு வெட்கம் ஓடிப் படர்ந்தது. தலைக் காயத்தை மறைத்துக் கொள்ள முடிந்திருந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும். தான் அடிவேண்டி விட்டேன் என்று பெரியமாமன் ஊர் பூராகச் சொல்ல போகிறானே என்று கூச்சமாக இருந்தது.

"அப்ப யோகலிங்கண்ணை..! நான் வரப்போறன். இரண்டொருநாள் தள்ளி வாறன்."

என்று எழும்பினான் ரஞ்சன். அவன் எழும்பியதும் ராஐ¡வும் உடனே செற்றியை விட்டு எழும்பினான்.

"இரு தம்பி! அக்கா தேத்தண்ணி போர்றா. குடிச்சிட்டுப் போகலாம்."

எனக்கூறியபடி லேசாக ராஐ¡வைக் குறித்துக் கண்ணைக் காட்டினான் யோகலிங்கம்.

திரும்பவும் செற்றியில் குந்திய ரஞ்சன் ராஐ¡விடம் சொன்னான்.

"பெரியமாமா தன்னோடை ரண்டு நாள் உங்களைத் தங்கச் சொல்லுறார். இருங்கோவன் இரண்டு நாள் கழிச்சு வந்து கூட்டிக் கொண்டு போறன்."

ட்ரேயில் தேத்தண்ணி கொண்டு தவமணி மாமி வந்தார். ரஞ்சனுக்கு தேத்தண்ணியை எடுத்துக் கொடுத்துக் கொண்டு ராஐ¡வைப் பார்த்து சுகம் விசாரித்தார்.

மதுவந்தியைப் பற்றிக் கேட்டபடி பெரியமாமியுடன் கதையைத் துவக்கினான் ராஐ¡. ரஞ்சனுக்கு வேலை சுலபமாகி விட்டது. அவன் மெதுவாக எழும்பி வாசலுக்கு வந்தான்.

யோகலிங்கம் ரஞ்சனுடன் வெளிவாசல் வரை வந்து திரும்பவும் ஒருமுறை தனது குடும்பக் கஸ்ட்டங்களை சொல்லத் தொடங்கினார்.


- ஜெயரூபன் (மைக்கேல்)

- (தொடர்ச்சி)

Quelle - பதிவுகள் - ஏப்ரல் 2002, இதழ் 28

No comments: