Wednesday, October 12, 2016

ஏழாவது சொர்க்கம் - 7

அச்சம் தருகிற அமைதி சூழ்ந்த பிரதேசம் அவனது தொழிலுக்கு வசதியும் பாதுகாப்பும் கொண்டது. பகலில் நிறைந்திருந்த ஐனசந்தடியின் பாரத்தை அகற்றி விச்ராந்தியான தவத்தில் தனித்து ஓடும் செயிண்ட் லோரண்ட் வீதியின் பஸ்தரிப்பு ஒன்றில் குமாரின் வரவுக்காக காவல் நிற்கிறான் ராஐ¡.

கசினோவுக்கு எதிரே இருக்கும் இந்த பஸ்தரிப்பில் விடிகாலை இரண்டு மணிக்கு வந்து தன்னைச் சந்திக்கச் சொல்லி குமாரின் ஏற்பாடு.

மைனஸ் இருபதுடிகிரி குளிரையும் பாராது பஸ்தரிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்துசேர்ந்து மேலதிகமாக அரைமணித்தியாலம் கழிந்து விட்டது. குமார் இன்னமும் வந்துசேரவில்லை. குமாரினது கார் எங்காவது பார்க் செய்யப்பட்டிருக்கிறதா எனத் தேடிக் கண்கள் அலுத்துவிட்டது. எதிரே கும்மாளம் போட்ட கசினோவும் அலுத்துச் சலித்த குழந்தை போல உறங்கி வழிகிறது. வாழ்வின் சுகங்களை உறிஞ்சிக் குடித்த களைப்பில் கசினோவை விட்டு மெல்ல மெல்ல அகல்கின்றனர் மனிதர்கள். விடிகாலை மூன்றுமணிக்கு கசினோவைப் பூட்டிவிடுவார்கள். அதன் பிறகு தனியனாக பஸ்தரிப்பில் நிற்பது ஆபத்தை விலைக்கு வேண்டுவதாகிவிடும்.

ராஐ¡விடம் இருக்கும் கடைசிக் கையிருப்பான ஜம்பதுகிராம் து¡ளையும் ஒரு பார்ட்டியிடம் ரொக்கமாக விற்றுத் தருவதற்காக குமார் ஒழுங்கு செய்திருந்தான். அவனது அப்பார்ட்மெண்டில் ஒளித்து வைக்கும் கண்ணுக்குத் தெரியாத இடுக்குகளையெல்லாம் மோப்பம் பிடித்து ஐ¢ஸில் து¡ளை எடுத்து புகைத்துவிட்டு ஒன்றுமே அறியாத பூனை மாதிரி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு போதையில் து¡ங்கி வழிகிறாள். காதலின் அந்நியோன்னியம் காரணமாக அவளைக் கடிந்து கொள்ளவும் முடிவதில்லை.

து¡ளை கையில் வைத்திருக்க வைத்திருக்க நிறை கரைந்து போகிறது. அதைவிட கடந்த மாதம் பொலிசில் பிடிபட்டு மீண்டதிலிருந்து எப்போது வீட்டுக்குப் பாய்வார்களோ என்ற பயம் அலைக்கிறது. தற்செயலாக வீட்டில் பாய்ந்து மொத்தமாக து¡ளைக் கைப்பற்றிவிட்டார்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு எட்டுவருடம் தீட்டி விடுவார்கள். சிறைக்குள் கம்பி எண்ணுவதைக்கூட தாங்கிவிடலாம். இந்த ஒரு விசயத்தை வைத்தே மாமன்மார் ஊரில் உறவுகள் அயலவர்களிடம் அவனைப்பற்றி எள்ளி நகையாடி நாறடித்து விடுவார்கள். அதுதான் ராஐ¡வை குறைந்த விலைக்காவது இதை விற்றுவிடத் து¡ண்டியது. அதுவும் நாலில் ஒரு பங்கு இலாபத்தை குமாருக்கு கொமிசனாக வேறு கொடுக்க வேண்டும். ஏற்கனவே காசுப்பிரச்சனையில் இரண்டுபேரும் துவக்குத் து¡க்குமளவுக்கு சண்டை பிடித்தார்கள். ஆனாலும் மொன்றியல்நோர்த் பகுதி நிழல்வியாபாரத்தை தனது கையில் வைத்திருக்கும் குமாரைப் பகைத்துக் கொண்டு ராஐ¡வால் சில்லறை வியாபாரம் செய்யமுடியாது. இப்போதுள்ள ராஐ¡வின் கஸ்ரமர்கள் பெரும்பாலோரும் குமார் மூலமே ராஐ¡வுக்கு பழக்கமானவர்கள். குமாருடன் மனக்கசப்பு ஏற்பட்டால் எந்த நிமிசமும் கஸ்ரமர்களை திசைதிருப்பி விடுவான் என்பதால் திரும்பவும் அவனுடன் சமாதானம் செய்து கொண்டான்.

என்றாலும் முற்றுமுழுதாக குமாரை நம்பமுடியாது என்று ராஐ¡வின் மனம் ஓயாது முறையிட்டது. இந்த நிழல் வியாபாரத்தில் யாரிடமும் தொடர்ந்து நம்பிக்கையும் நம்பாமையும் வைத்திருக்க முடியாது என்பதால் வெற்று கொக்கோக்கோலா ரின்னுக்குள் து¡ள்பார்சலை அடசி கண்ணுக்குப் படக்கூடிய இடத்தில் து¡ரமாக ஒரு குப்பைத் தொட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டுத்தான் பஸ்தரிப்பில் வந்து குமாருக்காக காவல் இருந்தான்.

கடந்தமாதம் பொலிஸ் தன்னை அச்சொட்டாகப் பிடித்ததுகூட குமாரின் சதிவேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் இன்னமும் ராஐ¡வின் மனதில் இருக்கிறது. அன்றும் இப்படியொரு சாமவேளை வழமையாக கிழமைக்கு இரண்டுமூன்று தடவையாவது து¡ள் வேண்டும் 94 இரண்டு தடவை ராஐ¡வின் பேஐரில் தொடர்பு கொண்டான். வாடிக்கைக்காரன் என்பதால் ராஐ¡வும் நித்திரைத்து¡க்கத்தையும் பார்க்காது ஒரு பார்சல்து¡ளை எடுத்து தனது சொக்ஸ¥க்குள் வைத்துக்கொண்டு 94 தந்த சங்கேதக் குறிப்பின்படி அவனது இடத்திற்கு டிலிவரி செய்ய போகும்போது பொலிஸ்காரன் இடையில் வைத்து ராஐ¡வின் காரை மறித்து தானே ஒழித்து வைத்ததை எடுப்பது மாதிரி ராஐ¡வின் சொக்ஸ் மடிப்புக்குள்ளிருந்து து¡ளை எடுத்து அவனைக் கைதும் செய்து கொண்டான். தான் பாவிக்கவென வேண்டியது என்று ராஐ¡ சொல்லி அதேபடிக்கு பொலிஸில் கேஸ் பதிவாகியதால் ஒருவாறு வெளியேவர முடிந்தது. அப்படி இருந்தும் மூன்று நாட்கள் வைத்திருந்து உருட்டி விசாரித்துவிட்டுத்தான் வெளியே விட்டார்கள்.

அவனது கார் அடுத்த வீதியில் பார்க் செய்யப்பட்டிருந்தது. எப்போதும் கைகாவலுக்காக வைத்திருக்கும் கிரீஸ்கத்திகூட காருக்குள் இருந்தது. அடுத்தடுத்து நிறைய சிகரெட்களை புகைத்து தொண்டை கட்டிவிட்டது. ஒரேநிலையில் நின்று லெதர்ஐ¡க்கெட்டுக்குள்ளால் குளிர் ஊடுருவிவிட்டது. இனியும் தாமதிக்கமுடியாதவாறு பல்லுக்கிட்டி நடுங்கியது. கையில் து¡ள்ப்பார்சல் இருந்திருந்தால் ஒருசிட்டிகை எடுத்து உறிஞ்சியிருப்பான். நாசிக்குள் குப்பென ஹெரோயின் காரத்துடன் படர்ந்திருந்தால் காத்திருப்பும் இந்தக்கடுங்குளிரும் தோற்றாது கனவில் மிதந்திருப்பான். தொடர்ந்து இரண்டுநாட்களாக விஸ்கி குடித்ததால் வாய் கசப்பேறி துப்பல் ஊறியபடி இருக்கிறது. தலைவேறு அம்மிக்கல்லாக பாரிக்கிறது. இந்த அவஸ்தை தந்த அரியண்டத்தால் இன்று து¡ளை புகைக்க வெறுப்பு வருகிறது அதைவிட கையிருப்பில் இருந்த எழுபதுகிராம் து¡ளில் இன்று நிறுத்துப்பார்க்க ஜம்பதுகிராம்தான் இருந்தது. ஐ¢ஸிலும் அவனும் ஆள்மாறி ஒருத்தர் கிள்ளி எடுத்து இருபதுகிராமைக் காலி செய்திருந்தார்கள். கிட்டத்தட்ட எழுபதுகிராம் து¡ளையும் விற்றால் வரும் இலாபக்காசு கரைந்து விட்டிருந்தது.

பொலிசின் கவனத்துக்கு தனது கார் நோண்டியாகிவிட்டது என்பதால் நேற்றுத்தான் சின்னமாமனின் பெயருக்கு காரின் உரிமையை மாத்தி விட்டிருந்தான். கொஞ்ச நாளைக்கு இந்தக்காரை மாமனது உபயோகத்திற்கு விட்டுவிட்டு தான் ஒரு ரொ§ஐ¡ற்றா வாகன் வேண்டி ஓடும் எண்ணத்தில் இந்தத் து¡ள்க்காசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இரவுபஸ் வந்து தரிப்பில் நின்று கதவுகளைத் திறந்தபடி டிரைவர் இவனுக்காக காத்திருக்க ராஐ¡ டிரைவரை நோக்கி தான் ஏறவில்லை என கையைக்காட்டினான். டிரைவர் கதவை மூடிக்கொண்டு வேகமாக இழுத்துச் சென்றான் குளிர் தந்த வெறுப்பில்.

நேரம் செல்லச் செல்ல ராஐ¡வுக்கு சலிப்பு மீது¡றி குமாரைக் கண்டபடி து¡சணத்தால் பேசியபடிக்கு பஸ்தரிப்பின் கண்ணாடிச்சுவருக்கு பூட்ஸ் காலால் உதைந்து தன் வெறுப்பை வெளிவிடவும்இ கறுப்புநிற சவலெட்கார் ஒன்று வேகமாக வந்து கிரீச்சிட்டு நின்றது. காருக்குள் இருக்கும் ஆட்களை ராஐ¡ யாரென்று அனுமானிக்கும் முன்னரேஇ சடுதியாக மூன்று தடியர்கள் குதித்து இறங்கினர். அவர்களில் இரண்டுபேர் அவனுக்குக் கிட்டவர மூன்றாமவன் பஸ்தரிப்பு வாசலை மறைத்துக்கொண்டு நின்றான்.

ராஐ¡வை நெருங்கி வந்த இருவரில் ஒருவனது கையில் துவக்கு இருந்தது. துவக்கைப் பிடித்திருந்தவன் "எடு ஹெரோயினை" என்று கத்தினான். மற்றவன் வாகாக நின்றுகொண்டு ராஐ¡வின் முகத்தில் ஓங்கிக் குத்தினான். சொண்டு கிழிந்து இரத்தம் வழிந்தது. அடித்தவன் நெருங்கி வந்து ஐ¡க்கெட்டைத் தட்டி சோதித்தான். ராஐ¡ திமிறி அவனைத் தள்ளிவிட அவன் தடுமாறி கண்ணாடிச்சுவருடன் சாய்ந்து பின் நிதானித்துக் கொண்டு காலால் எட்டி ராஐ¡வின் வயிற்றில் உதைந்தான் . ராஐ¡வுக்கு உயிர்த்தலத்தில் இருந்து சிவ்வென்று வேதனை கிளம்பியது. மூச்சு விட முடியாதவாறு நெஞ்சு அடைத்து அந்தரமாக அப்படியே குனிந்து நிலத்தில் இருந்து விட்டான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ராஐ¡வின் ஐ¡க்கெட் தடியனின் கையில் இருந்தது. ஐ¡க்கெட்டை தலைகீழாகப் பிடித்து உதறிப்பார்த்துவிட்டு து¡ர எறிந்தான்.

"ஹெரோயின் எங்க மான் ஹெரோயின்..?"

என்று தலைமயிரில் பிடித்து இழுத்தான். தலைமயிர் பிடுங்கப் பட்டுவிடும் போல வலித்தது. தலையை விடுவிக்கும் நோக்கத்துடன் பலமெல்லாவற்றையும் திரட்டி தடியனைத் தள்ளிவிட்டான் ராஐ¡. அதேநேரம் காரிலிருந்த மூன்றாவது ஆள் சகாக்களை "சீக்கிரம் வா.. வா..!" என கத்தினான். வீதியில் வாகனம் ஒன்றின் வெளிச்சம் தெரிந்ததும் தலலைமயிர்ப் பிடியை மெல்ல விட்டான் தடியன். ராஐ¡ எழும்புவதற்கு முயற்சிக்கஇ வேகத்துடன் வந்து தலையைத் தாக்கியது சுத்தியல் அடி. அதன்பின் வானத்து நட்சத்திரமும்இ வீதி லைட்களும் ராஐ¡வின் மூளைக்குள் வந்து குதிக்கஇ பஸ்தரிப்புக்குள் நினைவற்று விழுந்தான்.

¦ஐன்தலோன் ஆஸ்பத்திரி அவசரப்பிரிவில் படுத்திருந்தான் ராஐ¡. தலையில் அம்மியைத் து¡க்கி வைத்திருப்பது மாதிரி பாரித்தது. வலக்கையை அசைக்க முடியவில்லை சேலைன் ஏறிக்கொண்டிருந்தது.

"பயப்படும்படியாக ஒன்றும் இல்லை. நீ நிறைய இரத்தத்தை இழந்திருக்கிறாய். பலவீனம் மட்டும்தான்." என்று நர்ஸ் கூறிவிட்டுச் சென்றிருந்தாள். ஆனாலும் ராஐ¡ பயந்தபடிதான் இருந்தான். தான் எப்படி ஆஸ்பத்திரிக்கு வந்தேன் என்ற ஞாபகத்தைத் தேடி அலைந்தான்..

விடிகாலையும் கறுப்புச் சவலெட்காரும் மூன்று எதிரிகளும் ஞாபகத்தில் எழும்பினர். அதை நினைத்த மறுவிநாடியேஇ இதயத்துடிப்பு உச்சத்துக்கு ஏறியது. சடாரென எழும்பி பெட்டை விட்டு இறங்க முயன்றான். தொலைவில் இருந்து அதைப் பார்த்துவிட்ட நர்ஸ் அவனை நோக்கி விரைந்து வந்தாள்.

"ஏதாவது அசைகரிகமாக இருக்கிறதா?" கேட்டாள் நர்ஸ்.

இல்லை என்குமாப்போல தலையை ஆட்டினான்.

"வோ–ரூம் போகப் போகிறாயா..?"

அதற்கும் இல்லை என்று தலையாட்டினான்.

"மிஸ்டர்..! இதோ இந்த சேலைன் ஏறிமுடிந்ததும் டொக்டர் வந்து இன்னொருமுறை காயத்தைப் பரிசோதித்துவிட்டுஇ உன்னை வீட்டிற்கு அனுப்பிவிடுவார் அவசரப்படாதே..!"

என அவனுக்கு ஆறுதல் சொல்லிஇ திரும்பவும் அவனை பெட்டில் படுக்க விட்டு அகன்றாள்.

அடித்தது யாரென்று தெரியவில்லை. அவன் தனது வாடிக்கைக்காரர்கள் அனைவரது முகங்களையும் ஒவ்வொன்றாக மீட்டிப்பார்க்க முயன்றான். அவற்றில் ஒன்றும் அடித்தவர்களில் இல்லை. அப்போது யார் அடித்தார்கள்? ஏன் அடித்தார்கள்..? அடித்து து¡ளைப் பறிப்பது மட்டும் அவர்கள் குறிக்கோள் அல்ல. தன்னைக் கொல்ல முனைந்திருக்கிறார்கள். தலையில் ஒட்டியிருந்த பிளாஸ்ரரை தடவிப்பார்த்தான். நெற்றிக்கு மேலே முன்மண்டை முழுவதையும் மறைத்தபடி வியாபித்திருந்தது பிளாஸ்ரர். அப்போ கொல்லத்தான் முனைந்திருக்கிறார்கள். தன்னைக் கொல்வதுதான் அவர்களது திட்டம் என்றால் இங்கு ஆஸ்பத்திரிக்குகூட தேடிவந்து விடுவார்களே என்ற பயம் பீடித்தது. அவனால் பெட்டில் படுத்திருக்க முடியவில்லை. எழும்பி இருப்பதும் சுற்றுமுற்றும் மிரட்சியுடன் பார்ப்பதுமாக இருந்தான்.

அது காலை நேரம். தாதிகள் வேலை முடிப்பதிலும் பகல் ஷிப்ட்காரர் வேலை ஆரம்பிப்பதிலும் பிஸியாக இருந்தனர். அத்துடன் இவன் ஒன்றும் அவசரப்பிரிவுக்கு ஏற்ற நோயாளியும் அல்லவே!

சேலைனைப் பிடுங்கி எறிந்துவிட்டு மெல்ல ஆஸ்பத்திரியை விட்டு ஓடிவிடுவோமா என்று யோசித்தான். ஓடிவிடலாம்  ஆனால் தனியாக வெளியில் போகமுடியாது. அவர்கள் ஆஸ்பத்திரி வெளிவாசலில் காவல் இருப்பார்கள். அதில் வைத்தே தனது கதையை முடித்துவிடுவார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் பதகளித்தபடி இருக்க புதிய தாதி ஒருத்தி அவனிடம் வந்தாள்.

"காலைவணக்கம் இன்று எப்படி இருக்கிறாய்?" என்று தொடர்ச்சியாக ஒப்புவித்துக்கொண்டு விசயத்திற்கு வந்தாள்.

"டாக்டர் உன்னைப் போகச் சொல்லிவிட்டார். உன்னை அழைத்துப்போவதற்கு உறவினர் வரமுடியுமா? நீ மிகவும் பலவீனமாக இருக்கிறாய்." என்றாள்.

ஆக எனக்கு ஆபத்து என்று அவளுக்கே தெரிந்திருக்கிறது. வெளியில் எதிரிகளின் கறுப்புக்காரை இவளும் பார்த்திருக்கிறாள் போலும். எதிரிகள் எத்தனைபேர் வந்திருக்கிறார்கள் என்று கேட்போமா என ராஐ¡வின் மனதில் கேள்வி ஓடியது.

"எத்தனைபேர்..?" என்று அரைகுறையாக நர்சைப் பார்த்துக் கேட்டான்.

"யாராவது ஒருவர். உனது உறவினர் அல்லது நண்பர்கள் வந்தால் நல்லது. யாரும் வரஇயலாவிட்டால் சொல்

நான் உன்னை அம்புலன்சில் அனுப்பிவைக்கிறேன். ஆனால் நீ அதற்கு கட்டணம் செலுத்தவேண்டும்." என்று சொன்னாள் தாதி.

ராஐ¡வுக்கு கோபம் வந்தது. தான் ஏதோ கேட்க இவள் ஏதோ மறுமொழி சொல்லுகிறாள் விசரி..!

தான் அடிவேண்டியது மாமன்மாருக்கோ குமாருக்கோ தெரியக்கூடாது என்ற முடிவில் இருந்தான் ராஐ¡. ரஞ்சனுக்கு விசயத்தைத் தெரிவித்து அவனை இங்கே கூப்பிடுவதுதான் நல்லது. ஆனால் தான் தனியாக ரெலிபோன் பண்ணப் போகமுடியாது. ஆகவே ரஞ்சனது தொலைபேசி இலக்கத்தைச் சொல்லி அவனை அழைக்கும்படி நர்ஸிடம் சொன்னான்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலத்திற்குப் பிறகு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிவந்தான் ரஞ்சன். வேலை உடுப்பில் எண்ணெய்க் கறையும் மாவுமாக இருந்தது. அவனது வேலை இடத்திலிருந்து நேராக இங்கு வருகிறான் என்று ஊகிக்க முடிந்தது.

"என்ன நடந்தது ராஐ¡..! வேலைத்தலத்துக்கு மனுசி போன் பண்ணிச்சுது. அங்க ஒருத்தருக்கும் சொல்லாமக் கொள்ளாம போட்டது போட்டபடி ஓடி வாறன். என்ன அக்சிடெண்டே..?"

"இல்ல கொல்லப் போறாங்கள்."

"ஆர் கொல்லப் போறாங்கள் என்ன ராஐ¡ சொல்லுறியள்..?"

"கறுப்புக்கார் கள்ள யோகலிங்கம் கள்ள சபாலிங்கம் கள்ளக் குமார் என்னைக் கொல்லப் போறாங்கள்."

என்று சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் ராஐ¡.

தலையில்பட்ட காயத்தில் மூளை தடுமாறிவிட்டது பயந்து போயிருக்கிறான் என்று ரஞ்சனுக்கு உடனே விளங்கிவிட்டது. இரண்டொரு நாள் போனதும் சரியாகி விடுவான் என்று ஆறுதல் பட்டான்.

நர்ஸிடம் சென்று எல்லாவற்றையும் அறிந்து கொண்டபின்தான் ரஞ்சனுக்கு விசயம் விளங்கியது. இது வியாபாரப்போட்டி காரணமாக நிகழ்ந்திருக்கிறது. பொலீசில் கேஸ் பதிவாகியுள்ளது. ஆகவே சிக்கல்தான். எதுவாக இருந்தாலும் ராஐ¡வுக்காக முன்னின்று செய்யவேண்டும் என்று அவனது நன்றியுணர்வு சொன்னது.

ராஐ¡ சொல்லிக் கொண்டிருந்த தேவையில்லாத பயக்கதை எல்லாவற்றையும் மெல்ல மாற்ற முயற்சித்தும் கீறல் விழுந்த ரெக்கோட் பாடுவது போல அதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்த ராஐ¡வை கையைப் பிடித்து அழைத்து வந்து காரில் ஏற்றினான் ரஞ்சன்.

சீட்பெல்ட்டைப் போடுவதற்கு முன்பே காரின் நான்கு கதவுகளையும் லொக் பண்ணச் சொல்லிக் கட்டளையிட்டான் ராஐ¡.

எவ்வளவோ ஆறுதல்ப்படுத்தியும் ரஞ்சனை அப்பார்ட்மெண்டை விட்டுப் போகச் சம்மதிக்கவில்லை ராஐ¡. வேலை அரைகுறையில் கிடக்கிறது. தான் போனபின்தான் அரைவாசி வெலையே ஒப்பேற்ற வேண்டும் என்று எடுத்துச் சொல்லியும்இ குழந்தைப்பிள்ளை மாதிரி கையைப் பிடித்து இழுத்தபடி இருந்தான் ராஐ¡.

"ராஐ¡ இப்ப போட்டு விடியக்காலமை ஓடியாறன். லீவும் போடேல்லை. எங்கட பத்திரோனைப் பற்றி உங்களுக்குத் தெரியுந்தானே பிறகு நிப்பாட்டித் துலைச்சுப் போடுவான்"

"சரி போட்டு உடன வா..!"

"ஓ.. காலமை வருவன்"

"போட்டு வா.. கவனம்..! கறுப்புக்காரை பாத்தால் வெளியால போகாதை..!"

என்று பத்துத்தடவைக்கு மேல் ரஞ்சனுக்கு கவனம் சொல்லி வழியனுப்பனான் ராஐ¡.

ரஞ்சன் அறையைவிட்டு வெளியேறியதும் கதவை அடிச்சுப்பூட்டி மூன்று பூட்டுகளையும் லொக் பண்ணி செற்றியை நகர்த்தி கதவுக்கு முண்டு கொடுத்து விட்டு வந்து இருந்தான் ராஐ¡.

பேக்கரிக்குள் நுழைந்ததும் உடனே ராஐ¡வின் சினேகிதி ஐ¢ஸிலுக்கு பேஐரில் தொடர்பு கொண்டான் ரஞ்சன். அரைமணித்தியாலத்தின் பின்னர் ரெலிபோன் எடுத்த ஐ¢ஸிலுக்கு ராஐ¡வுக்கு நடந்ததை விரிவாக எடுத்துக்கூறி நாளைவரை அவனுடன் கூடத்தங்கும் படியும்இ சாப்பாட்டு வசதிகளை ஒழுங்கு செய்யும்படியும் கேட்டுக் கொண்டான்.

இவ்வளவையும் கேட்டு மிகப் பொறுப்புடன் சம்மதித்த ஐ¢ஸில் ரெலிபோனை வைத்ததும் ராஐ¡வின் இருப்பிடத்திற்கு இனிமேல் போகக்கூடாதென்று முடிவெடுத்துக் கொண்டாள்.

- ஜெயரூபன் (மைக்கேல்)

- (தொடர்ச்சி)

Quelle - பதிவுகள் பெப்ருவரி 2002, இதழ் 26

No comments: